
கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பாக தவெக தலைவர் விஜய் தற்போது ஆஜராகி உள்ளார். விஜய்யிடம் 2ஆவது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
டெல்லியில் கடந்த 12ஆம் தேதி விஜய்யிடம் முதல் முறையாக சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று 2ஆவது முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடமும் கரூர் ஆட்சியர்- எஸ்பி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய்யிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.