உள்நோக்கம் இல்லைங்க... திடீரென விஜய் அளித்த விளக்கம்!

உள்நோக்கம் இல்லைங்க...
திடீரென விஜய் அளித்த விளக்கம்!
Published on

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சு அவையின் உரிமையை மீறுவதாக தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் எனும் முறையில், விஜய்யின் (tvk vijay) சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், “ சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com