கோயில் அறங்காவலர் குழுவில் விஜய் படத் தயாரிப்பாளர்!

படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
Published on

அறநிலையத் துறை சார்பில் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் அரசின்சார்பில் நியமிக்கப்படுவது வழக்கம். புதிய ஆட்சி அமைந்த நிலையில், பழைய அறங்காவலர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்கும் நடைமுறைகள் தொடங்கிவிட்டன.

இதற்கான தேர்வுக் குழுவை அரசு அறிவித்துள்ளது. இதில், விஜய் நடித்த பிகில், தி கோட் ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் இடம்பெற்றுள்ளார்.

மயிலம், பொம்மபுரம் ஆதினம், சிவஞான பாலய சுவாமிகள் இதற்குத் தலைவராகவும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கே.இராமநாதன் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா.சம்பத், சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீ, டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாகவும்,

அறநிலையத் துறை ஆணையர் பதவிவழி உறுப்பினராகவும் குழுவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துறையின் செயலாளர் குமரகுருபரன் இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com