கரூர் துயரம் ஓராண்டு - விஜய், கனிமொழி நினைவுக் குறிப்பு!

கரூர் துயரம்
கரூர் துயரம்
Published on: 

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்து இன்று ஓராண்டு காலம் ஆகிறது. இதை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், தி.மு.க. கனிமொழி உட்பட பல தலைவர்களும் நினைவுக்குறிப்புகளை வெளியிட்டுள்ளனர்.  

முதலமைச்சர் விஜய் :

”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27.

என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.

நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.

நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.”

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி : 

”கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.

இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி.

logo
Andhimazhai
www.andhimazhai.com