இப்தார் விருந்தில் விஜய் சொன்ன 2 தகவல்கள்!

இப்தார் விருந்தில் விஜய் சொன்ன 2 தகவல்கள்!
Published on

த.வெ.க. சார்பில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று மாலையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின்னர் அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய் சுருக்கமாகப் பேசினார். 

பா.ஜ.க. கூட்டணியில் அவர் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அதை மறுக்கும்வகையில், மதச்சார்பற்ற சமூக நீதிக் கூட்டணி என்பதை அவர் இன்று உறுதிப்படுத்தினார். 

மேலும், த.வெ.க. தலைமையில்தான் ஆட்சி என்றும் அவர் கூறினார். அதாவது, வேறு கட்சிகளுடன் கூட்டணி இல்லை; ஒருவேளை கூட்டணி இருந்தாலும் அது த.வெ.க. தலைமையில்தான் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

“நாம் அரசியலில் வந்ததிலிருந்தே நம்மைப் பற்றி வதந்திகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.” என அவர் கூறத் தொடங்கியதுமே, கூச்சல் பெருகியது. 

சின்ன விசயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன் என அமைதிப்படுத்தி தொடர்ந்தவர், அந்த டீம் இந்த டீம் எனச் சொன்னவர்கள் அது முடியாமல் போகவே, அந்தக் கூட்டணி இந்தக் கூட்டணி எனக் கூறத் தொடங்கினார்கள் என்றார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com