தமிழ் நாடு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலையில் சந்தித்துப் பேசினார்.
பழனிசாமியின் சென்னை அரசு இல்லத்தில் இருபது நிமிடங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆதவ் அர்ஜூனாவின் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் உள்ளே இருப்பது எளிதாக வெளியில் தெரியாதவண்ணம் இருந்ததால், செய்தியாளர்களால் முதலில் உள்ளே சென்றபோது, அவரைக் கண்டறிய முடியவில்லை என சன் ஊடகம் தெரிவித்துள்ளது.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்தபோது, காரில் இருந்தது விஜய்தான் என்பதை உறுதிப்படுத்த முடிந்ததாகவும் கூறப்படுகிறது.