உதய் அறையில் ஆதவ்... செங்கோட்டையனை அமரவைத்த விஜய்!

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
Published on

விஜய் அமைச்சரவையில் ஒரு வாரம் கழித்து துறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அனைத்து அமைச்சர்களும் இன்று அவரவர் அறைகளில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  

மூத்த அமைச்சரும் நிதியமைச்சருமான செங்கோட்டையன் அவருடைய அறையில் பொறுப்பேற்றுக்கொண்டபோது, முதலமைச்சர் விஜய் அவரது அறைக்கு வந்து வாழ்த்தி இருக்கையில் அமரவைத்தார். அவருக்கு செங்கோட்டையன் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார்.

அமைச்சரவையில் இரண்டாம் இடம் வகிக்கும் ஆனந்தையும், விஜய் அவரது அறைக்குச் சென்று அமரவைத்தார்.

பின்னர், ஆனந்த் பல அமைச்சர்களுக்கும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

பொதுப்பணிகள், விளையாட்டு துறைகளுக்கான அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு முன்னாள் துணைமுதலமைச்சர் உதயநிதியின் அறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com