கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கரூரில் நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
வழக்கு விவரம்:
குற்ற எண்: 855/2025 பிரிவு 105,110,125 (b)r, 223 r/w 3 of,TNPPDL Act
* A1 குற்றவாளி மாவட்டச் செயலாளர் மதியழகன்
* A2 பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
* A3 நிர்மல் குமார் மற்றும் பலர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தவெக தலைவர் விஜய்யையும் இந்த வழக்கில் விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக சேர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவா?
கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.