விஜய் கட்சி பெயர் மாற்றம்: நாளை நிர்வாகிகள் கூட்டம்!

விஜய் கட்சி பெயர் மாற்றம்: நாளை நிர்வாகிகள் கூட்டம்!

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியின் பெயர் சமூக ஊடகத்தில் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தபோது சர்ச்சைக்குள்ளானது. பெயரில் பிழை உள்ளது என பலரும் சுட்டிக்காட்டி விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயர் எக்ஸ் வலைதளம், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தமிழக வெற்றிக் கழகம் என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com