'வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை!' - விவாகரத்து வழக்கை திரும்பப் பெற்ற சங்கீதா!

விஜய்- சங்கீதா
விஜய்- சங்கீதா
Published on

முதலமைச்சர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரின் மனைவி சங்கீதா திரும்பப் பெற்றுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்டு அந்த வழக்கை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் இன்று முடித்துவைத்தது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்தும் ஜீவனாம்சமும் கோரி அவரின் மனைவி சங்கீதா வழக்கு தொடுத்திருந்தார்.

இரு தரப்பினரும் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு அனுமதி பெற்றனர்.

இதனிடையே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு என்னவாகும் என கேள்வி எழுந்தது.

இந்த சூழலில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சங்கீதா வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றார். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடப்பதால் நேரில் ஆஜராக விஜய் விலக்கு கேட்டிருந்தார்.

விசாரணையில், சங்கீதா தரப்பில் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com