தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

மாணவர்களைச் சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு இரு கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு 10ஆம், 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.

சுமார் 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி முழுவதும் விஜய் நின்றபடியே ஊக்கத்தொகையினை வழங்கினார். இதனால், அவர் சோர்வுற்றதாகக் கூறப்பட்டது.

அதனால் இந்த ஆண்டும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ள விஜய் அதை இரு கட்டங்களாக வழங்க உள்ளார்.

அதன்படி, முதல் கட்டமாக ஜூன் 28ஆம் தேதி கோவை, ஈரோடு, மதுரை உட்பட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 2ஆம் கட்டமாக ஜூலை 3 ஆம் தேதி சென்னை உட்பட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஊக்கத் தொகையினை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com