“மக்கள் சக்தியால் விஜய் முதல்வராவார்...”

செங்கோட்டையன்
செங்கோட்டையன்
Published on

மக்கள் சக்தியால் விஜய் முதல்வராவார் என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோடையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசுகையில், ”பெருந்துறை, விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய், வருகிற 18 ஆம் தேதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். காலை 11 மணிமுதல் நண்பகல் 1 மணிக்குள் அவர் உரையாற்றுவார்.

நிகழ்ச்சியைப் பாருங்கள், தமிழ்நாட்டில் இதுபோன்று நடந்துள்ளதா என்று. நாங்கள் செய்திருக்கின்ற பணிகள், நீங்களே பாராட்டும் அளவுக்கு இருக்கும். திமுகவில் இருந்தும் 30 பேர் தவெகவில் இணையவுள்ளனர்.

தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலைப் பொருத்தவரையில், மனுக்கள் பெறப்பட்டு, தலைவர்தான் அதனை முடிவு செய்வார்.

தேர்தல் களம் என்பது எப்படி செல்லும்? என்பதை எவராலும் யூகிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் இவர்தான் போட்டி, அவர்தான் போட்டி என்று சொல்ல முடியாது. மக்கள் சக்தியால் விஜய் முதல்வராவார்” என்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com