“மக்களின் அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்...!”

விஜயகாந்த் - மு.க.ஸ்டாலின்
விஜயகாந்த் - மு.க.ஸ்டாலின்
Published on

அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொன். ராதாகிருஷ்ணன், ஜி.கே.வாசன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதைபோல திரைபிரபலங்களும், திரைப்பட இயக்குநர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: "கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்; ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com