
விஜய் 100 கிமீ புயல்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய பாதிப்பை விட, இந்தமுறை விஜய் அதிக பாதிப்பை ஏற்படுத்துவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
டிடிவி தினகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், "விஜயகாந்தை விட விஜய் பெரும் பாதிப்பை உண்டாக்குவார். விஜயால் வருகிற 2026 தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்படும். விஜயகாந்த் 60 கிமீ புயல். விஜய் 100 கிமீ புயல்.
இதன் காரணமாக 2006 தேர்தலை விட திமுக அதிக பாதிப்புக்குள்ளாகும், விஜய் வருகையால் திமுகதான் அதிகம் பாதிக்கும். கடந்த 2006 தேர்தலில் விஜயகாந்தால் தான் மைனாரிட்டி அரசு உருவானது. அந்தத் தேர்தலில் திமுக, அதிமுக இருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. 2026 தேர்தலில் விஜயால் அதைவிட அதிக பாதிப்பு ஏற்படும்.
விஜயகாந்த் அந்த தேர்தலில் சதவீதம் வாக்கு பெற்றதுடன் ஒரு தொகுதியில் வெற்றியும் பெற்றார். விஜய் பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதற்காகவே அவரின் கூட்டணியில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நான் எதார்த்தத்தை சொல்கிறேன். அதற்காக அவருடன் இணைவேன் என்று எதிர்பார்க்க கூடாது. எனக்கு அவரைப் பார்த்து பொறாமை இல்லை.
திமுகவை போல அவரைப் பார்த்து பயப்படவில்லை. ஸ்டாலினும், உதயநிதியும் நேரடியாக அவரைப்பற்றி பேச பயப்படுகிறார்கள். அவர்களை போல மறைமுகமாக பேசாமல் நான் நேரடியாக பேசுவேன். அன்றைக்கு அதிமுக ஊழல் கட்சி என்று விஜய் கூறியபோது, அவரை முதலில் வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லுங்கள் என்று சொன்னவனும் நான் தான்." என்றார்.