தமிழ் நாடு

விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதியதாக 23 பேர் அமைச்சராகப் பதவியேற்றனர்.
மொத்தமுள்ள அமைச்சர்களில் இதுவரை இல்லாதபடி ஏழு தலித் சமூகத்தினர் அமைச்சர்களாக ஆகியுள்ளனர்.
ஒரே சமயத்தில் நான்கு பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர்.
இன்று காலையில் சுமார் 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா தொடங்கியது. 11 மணியளவில் நிகழ்வு முடிவடைந்தது.
கடந்த முறையைப் போலவே, வந்தே மாதரம் முதலிலும் தேசியப் பண் இரண்டாவதாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.
இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சண்முகம், வீரபாண்டியன், டாக்டர் இரவீந்திரநாத், வி.சி.க. தலைவர் திருமாவளவன், அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் தந்தையும் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான தனபால் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.