விஜய்யின் கடலூர் பிரச்சாரம் 3ஆம் முறையாக ரத்து!

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

த.வெ.க. தலைவர் விஜய் மூன்றாவது முறையாக கடலூர் மாவட்டத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை இரத்து செய்துள்ளார். 

முன்னதாக, இந்த மாதம் 9, 11 ஆகிய தேதிகளில் நடிகர் விஜய் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அனுமதியும் பெறப்பட்டது. 

ஆனாலும் முதல் முறை காரணம் எதுவும் சொல்லாமலும், பின்னர் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்ல முடியாத காரணத்தாலும் பிரச்சாரத்துக்குச் செல்லவில்லை. 

அவர் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் த.வெ.க. தரப்பில் திடீரென பிரச்சாரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்னறிவிக்காமல் விஜய் பெரம்பூருக்குச் சென்றுவந்தார். 

இன்றைய பிரச்சாரம் இரத்து செய்யப்பட்டதற்கு உரிய காரணம் தெரிவிக்காத விஜய், மறைமுகமாக ஆளும் கட்சியைக் குற்றஞ்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com