விஜய் மனு ஏற்பு, ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்திவைப்பு!

ஆதவ் அர்ஜுனா - விஜய்
ஆதவ் அர்ஜுனா - விஜய்
Published on: 

பரபரப்புக்கு இடையில் த.வெ.க. தலைவர் விஜய்யின் சென்னை பெரம்பூர் தொகுதி வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஆதவ் தன்னுடைய மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை என்றும் வங்கியில் பிக்சட் டெப்பாசிட் வருவாயைக் குறிப்பிடவில்லை என்றும் கையிருப்பாக 2 கோடி ரூபாய் வைத்திருக்கக்கூடாது என்றும் காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில் தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் குமார் சிங் வரும்வரை அவருடைய மனுவில் முடிவு எதையும் எடுக்காமல் நிறுத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com