புகழேந்தி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர்
புகழேந்தி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர்

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழப்பு- பிரச்சார மேடையில் மயங்கி விழுந்தார்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் புகழேந்தி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

நேற்று பிரச்சாரக் கூட்டத்தின்போது உடல்நலப் பிரச்னையால் அவர் மயங்கி விழுந்தார். கல்லீரல் பாதிப்புடன் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த புகழேந்தி, அதற்கான சிகிச்சையில் சென்னையில் இருந்துவந்தார். 

நேற்று சொந்தத் தொகுதியில் பிரச்சாரம் என்பதால், அவர் சென்னையிலிருந்து விழுப்புரம் சென்றார். கூட்டத்திலேயே அவருக்கு இரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் உடனடியாக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். 

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி இன்று காலையில் புகழேந்தி உயிரிழந்தார். 

அமைச்சர் பொன்முடி உட்பட்ட தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலியின்போது அமைச்சர் பொன்முடி கண்ணீர்விட்டு அழுதது, அங்கிருந்தவர்களை நெகிழச்செய்தது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com