விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பட் பதவியேற்பு
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பட் பதவியேற்பு

விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியேற்பில் மு.க.ஸ்டாலின்!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பட் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

கோட்டையில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் இன்று காலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தாரகை கத்பட்டுக்கு அவைத்தலைவர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் உடனிருந்தனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com