மீண்டும் வைரல் ஆக்‌ஷன்... கை தட்டி ரசித்த அமைச்சர்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (மார்ச் 6) நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

தற்போது அமைச்சர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி வருகிறார். 

அப்போது, முதலமைச்சரை பார்த்து திவ்யதர்ஷினி , சார் அந்த வைரல் ஆக்சன் மட்டும்  இன்னொரு முறை செய்ய முடியுமா? நாங்களும் ஹேப்பி ஆகிருவோம் என்று கேட்க,  உடனே இருக்கையில் இருந்து எழுந்த முதலமைச்சர்  ஸ்டாலின், ‘முடிந்துவிட்டது’ என செய்கை காட்டினார். இதை பார்த்த அமைச்சர்கள் கைத்தட்டி ரசித்தனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com