தமிழ் நாடு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் இன்று தன் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகினார்.
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அவர் முறைப்படி தன் விலகல் கடித்தத்தை இன்று அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்டதாக பேரவைத் தலைவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கட்சியில் உருவான அதிருப்திக் குழுவில் இடம்பெற்ற விஜயபாஸ்கர், அந்த அணியின் கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு அதிருப்தியாளர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடமே சென்ற நிலையில் இவரும் சி.வி.சண்முகமும் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை.
இந்த நிலையில், விஜயபாஸ்கரின் விலகல் கவனம் பெற்றுள்ளது.