பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

விருதுநகர்: 500 பட்டாசு ஆலைகள் தொழில்நிறுத்தப் போராட்டம்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 500 பட்டாசு ஆலைகள் தொழில்நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், விதிமீறிலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஃபோர்மேன்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கடந்த சில நாள்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தார். அதேபோல், பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பை எதிர்த்து விருதுநகரிலுள்ள ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் இன்று காலை முதல் காலவரையற்ற தொழில்நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 500 பட்டாசு ஆலைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com