சசிகலா அதிரடி நீக்கம் : அ.இ.பு.த.ம.மு.க. தலைவர் அறிவிப்பு!

சசிகலா
சசிகலா
Published on: 

ஒரு காலத்தில் அ.தி.மு.க.வையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சசிகலாவை, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் அ.இ.பு.த.ம.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் சக்கரவர்த்தி இன்று இதைத் தெரிவித்தார். 

அப்போது அவர் கூறியது:

“ கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்ற சசிகலா, தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. அவரைத் தொடர்புகொண்டு சந்திக்க முடியவில்லை. இதனால், அவர் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். 

இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல புதிய பொதுச்செயலர் விரைவில் நியமிக்கப்படுவார்.

தமிழக அரசையும் தற்போதைய ஆட்சியையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.” என்று சக்கரவர்த்தி கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com