வாக்கு எண்ணும் பணி… பூட்டை உடைத்த அதிகாரிகள்!

வாக்கு எண்ணும் பணி… பூட்டை உடைத்த அதிகாரிகள்!

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வாக்குப் பெட்டிகள் உள்ள கட்டடத்தின் நுழைவாயிலின் பூட்டிற்கான சாவி தொலைந்த நிலையில், வாக்கு எண்ணும் அதிகாரிகள் பூட்டை உடைத்து, வாக்கு எண்ணும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

அதேபோல், விருதுநர் மக்களவைத் தொகுதியில் ஸ்டிராங் ரூம் சாவி மாயம் ஆன நிலையில், அதன் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என வாக்கு எண்ணும் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com