
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ”எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான்” என்று கூறிய டிடிவி தினகரன், ”விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.” என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: “மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க நாங்களும் உறுதுணையாக இருப்போம். பழைய விசயத்தையே நினைத்துக் கொண்டு கட்சி நலனையும், மக்கள் நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது என்பதற்காகவும், மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி வருவதற்காகவும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
விட்டுக் கொடுத்து போகின்றவர்கள் கெட்டுப்போவதில்லை. எங்களுக்குள் இருப்பது பங்காளிச்சண்டைதான். பியூஸ் கோயலை சந்திக்க செல்கிறேன். அவரை சந்தித்த பிறகு விரிவாக பேசுகிறேன்.” என்றார்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என கூறி வந்த டிடிவி தினகரன் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.