“10 தொகுதிகள் கேட்டுள்ளோம்... ஆட்சியில் பங்கு கேட்கல...!”

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன்
Published on

"என்.டி.ஏ கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டிருக்கிறோம். ஆட்சியில் பங்கு கேட்கவில்லை ஆனால் கொடுத்தால் நன்றாக இருக்கும்." என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கூறியதாவது: “தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் பத்து தொகுதிகளை கேட்டிருக்கிறோம். அதை பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம். கேட்ட தொகுதிகள் கிடைக்கும். அதில் உறுதியாக நிற்போம்.

தென்மாவட்டத்தில் எங்களின் பலம் அதிகம் உள்ள தொகுதிகளின் பட்டியலை கொடுத்திருக்கிறோம். எந்தெந்த தொகுதி என்பதை பிறகு சொல்கிறேன்.

நாங்கள் பலமான கூட்டணியில் இருக்கிறோம் என்று நம்புகிறோம். அது வெற்றி பெறும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்கவில்லை. ஆனால், கொடுத்தால் நன்றாக இருக்கும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com