கோடை வெயில்
கோடை வெயில்

வானிலை அலர்ட்: அடுத்த 4 நாள்களுக்கு மக்களே உஷார்!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ரீமெல் புயல் கரையைக் கடந்ததையடுத்து காற்றின் ஈரப்பதம் குறைந்துள்ளது. மேலும், வடமேற்கு திசையில் தரைக் காற்று வீசுவதாலும், மேக கூட்டங்கள் கலைந்ததாலும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் வெள்ளிக்கிழமை (மே 28-31) வரை வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

ரீமெல் புயல் கரை கடந்த நிலையில் சென்னையில் திங்கள்கிழமை 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனிடையே, மே 4-இல் தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று நிறைவடைகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com