அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

செப்.24-ல் மேற்கு மண்டல தி.மு.க. தேர்தல் பயிற்சிப் பாசறை கூட்டம்!

காங்கயத்தில் நடத்தப்படுகிறது

தி.மு.க.வின் மேற்கு மண்டல தேர்தல் ஊழியர் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த மார்ச் 22ஆம் தேதி அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஜூலை 26 அன்று திருச்சியிலும், ஆகஸ்ட் 17 அன்று ராமநாதபுரத்திலும் நடத்தப்பட்டது. முறையே டெல்டா மற்றும் தென் மண்டல வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் அவற்றில் கலந்துகொண்டனர்.

அதையடுத்து, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 24-09-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் சிறப்புரை ஆற்றுகிறார் என்றும்,

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 14 மாவட்டச் செயலாளர்கள, தமது மாவட்டங்களுக்குட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை'க் கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி,

1. திருப்பூ வழக்கு

2. திருப்பூர் தெற்கு

3. சேலம் கிழக்கு

4. சேலம் மேற்கு

5. ஈரோடு வடக்கு

6. ஈரோடு தொற்கு

7. கரூர்

8. கோவை மாநகர்

9. கோவை வடக்கு

10. கோவை தெற்கு

11. நாமக்கல் கிழக்கு

12. நாமக்கல் மேற்கு

13. நீலகிரி ஆகிய தி.மு.க. மாவட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் இதில் கலந்துகொள்வார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com