மு.க. ஸ்டாலின் – கே.சி.வேணுகோபால் சந்திப்பில் நடந்தது என்ன…?

மு.க. ஸ்டாலின் – கே.சி.வேணுகோபால் சந்திப்பில் நடந்தது என்ன…?
Published on

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று இரவு சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், திமுக தரப்பில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். பேச்சுவார்த்தை குழுவைச் சேர்ந்த மற்ற யாரும் பங்கேற்கவில்லை.

அதேபோல், காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மட்டுமே உடன் இருந்தனர். மாநில நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த சந்திப்புக்கு பிறகு, மு.க.ஸ்டாலின், கே.சி.வேணுகோபால், கனிமொழி மட்டும் 10 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.

திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தலைமைகள் மட்டும் காதும் காதும் வைத்தது போல் பேசியிருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் திமுக தரப்பில் 25 முதல் 28 தொகுதிகள் வரை வழங்க முன்வந்தது. காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் 30 தொகுதிகள் வரை திமுக வழங்கக் கூடும் எனவும் கூறப்பட்டது. தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டை திமுக வழங்கலாம் எனவும் பேசப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலினுடனான கே.சி.வேணுகோபாலின் இந்த சந்திப்பைத் தொடர்ந்து திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினருடன் காங்கிரஸின் ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்யும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com