10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? – தேர்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர்!

Anbil Mahesh Poyyamozhi
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ஆ ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

அதன்படி, பிளஸ்-2 செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை
பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3- ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி 27-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ஆம் தேதி வெளியாகும் என்றும் பிளஸ்-1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com