
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, பபாசிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் நிர்வாக பதவிகளுக்கான தேர்தல், இரண்டாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்தல் நேற்று (டிச.1) சென்னையில் நடந்தது.
அதன்படி, சங்கத்தின் புதிய தலைவராக ஆர்.எஸ். சண்முகம், செயலராக வயிரவன், பொருளாளராக வெங்கடாச்சலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் பதிப்பகங்களுக்கான துணை தலைவராக நக்கீரன் கோபால், ஆங்கில பதிப்பகத்துக்கான துணை தலைவராக புருஷோத்தமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இணை செயலராக நந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழுக்கான துணை இணைச் செயலாளராக ஆடம் சாக்ரடீசும், ஆங்கிலத்துக்கான துணை இணைச் செயலாளராக ராமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழுக்கான செயற்குழு உறுப்பினர்களாக, அருண், முத்துசாமி, தோழமை பூபதி, வீரபாலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கிலத்துக்கான செயற்குழு உறுப்பினர்களாக சாதிக் பாட்ஷா, பாலாஜி, சங்கர், குரு தேவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.