யாரை கூட்டணியில் எதிர்பார்க்கலாம் ..?- நயினார் நாகேந்திரன் பதில்!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23ஆம் தேதி பங்கேற்கும் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் விவரம் தெரிய வரும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று ஜனவரி 18-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ”தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார கூட்டத்துக்காக ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்து திமுக அரசை அகற்ற வேண்டும்; தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்றார்.

அப்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணிக்கு வருவார்களா? என்ற கேள்விக்கு, ”பிரதமர் மோடி பங்கேற்கும் 23ஆம் தேதி பொதுக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பாருங்கள். ” என்றார்.

யாரை கூட்டணியில் எதிர்ப்பார்க்கலாம் ..? என்ற கேள்விக்கு “பாஜகவின் முதல் பிரச்சார கூட்டத்தில் பதில் கிடைக்கும்” என்றார் நயினார் நாகேந்திரன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com