அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்காதது ஏன்…? – ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி!

Aadhav Arjuna - Thol.Thirumavalavan
ஆதவ் அர்ஜூனா - தொல்.திருமாவளவன்
Published on

திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் கடந்த சில காலங்களாகவே ஆதவ் அர்ஜுனா பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். அவரது கருத்துகள் விவாதங்களைக் கிளப்பி வருகிறது.

இந்தச் சூழலில் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் உடன் திருமாவளவன் பங்கேற்காதது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார். அதாவது திருமாவளவனுக்கு திமுகவே அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் அந்த புத்தக விழாவில் கலந்து கொண்ட நிலையில், இதன் காரணமாகவே விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கக்கூடாது என்று திமுக அழுத்தம் கொடுத்தாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் கூட்டணி உருவாகும் என்று நினைப்பது முதிர்ச்சியற்றது என்றும் அவர் சாடியுள்ளார்.

அமைச்சர் எ.வ. வேலுதான் திருமாவளவனிடம் பேசியதாகவும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்பதை முதலமைச்சர் விரும்பவில்லை என்றும் எ.வ.வேலு அப்போது தெரிவித்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கே எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com