தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் நேற்று அவர் பேசியதாவது:
"தேர்தல் ஆணையரை பிரதமர் மோடி விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளில் குளறுபடி நடந்துள்ளது.
நாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கும்போது, மோடியும், அமித்ஷாவும் மட்டும் ஏன் தோற்கவில்லை?
இந்தியாவில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசின் மீது மக்களுக்கு விரைவிலேயே ஒரு வெறுப்பு மனநிலை உருவாகிவிடும்.
வங்கதேசப் போரில் வெற்றி பெற்று, உச்சத்தில் இருந்தபோதே இந்திரா காந்திக்கு கடுமையான எதிர்ப்பும் நெருக்கடியும் உருவானது.
நம் நாட்டில் பெரிய பெரிய தலைவர்களின் ஆட்சிக்கு எதிராகவே மக்களின் மனநிலை மாறியுள்ளது. ஆனால், ஏனோ தெரியவில்லை, பா.ஜ.க.விற்கு மட்டும் இத்தகைய நிலை ஏற்படுவதில்லை.
சில மாநிலங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக உருவான மனநிலை திடீரென மறைந்திருக்கிறது. அது எப்படி என்றுதான் புரிந்துகொள்ள முடியவில்லை.
இது வாக்குரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியரின் கருத்து, அடிப்படை கட்டமைப்பு, அவர்களின் உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதல்.
எனவே, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவிவிலக வேண்டும்." என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.