பிரேமலதா
பிரேமலதா

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது ஏன் தரவில்லை?- பிரேமலதா சொன்ன உண்மை!

மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு மே 9ஆம் தேதி பத்மபூஷன் விருது வழங்கவுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

“கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்துக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை என்றால், விருது வழங்கும் இடம் மிகச்சிறியது என்பதால் மூன்று முறை நான்கு முறை என்று என்று விருது தருவார்கள். அந்தவகையில், வருகின்ற 9 ஆம் தேதி விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சகத்திலிருந்து அழைத்து தகவல் சொன்னார்கள்.

தமிழக முழுவதும் வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் அக்னி நட்சத்திரம் மற்றும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. மக்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் தேமுதிக சார்பாக தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்துள்ளோம்.

அதேபோல தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம்

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கடந்த ஒரு மாதங்களாகவே விருதுநகரில் தங்கி இருந்து தனது தேர்தல் பணிகளை முடித்துள்ளார்.

நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் 4 மணி நேரம் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com