சிங்கம் சிங்கிள் மெஜாரிட்டியாக ஜெயிக்க வாய்ப்புண்டா?

சிங்கம் சிங்கிள் மெஜாரிட்டியாக ஜெயிக்க வாய்ப்புண்டா?
Published on

எடப்பாடி விஜய்க்கு கைகொடுப்பாரா ?

50 ஆண்டுகால தமிழக அரசியல் சூழலை இன்றைய காலை தேர்தல் முடிவுகள் புரட்டிப்போட்டுள்ளன. முதுபெரும் அரசியல் தலைவர்கள், மற்றும் அமைச்சர்களையே மண்ணைக் கவ்வ வைத்து ஹார்ட் அட்டாக் கொடுத்துள்ளனர் விசில் வகையறாக்கள்.

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு சில நிமிடங்கள் வரை கூட திராவிட அரசியல் கட்சிகள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஊர், பேர் தெரியாத பல விசிலர்கள் முன்னணிக்குச் சென்றுகொண்டே இருக்க தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

காலை 10 .30 நிலவரப்படி முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அனைவரும் தோல்வி முகத்தோடு இருக்க, 105 க்கும் மேற்பட்ட தொகுதிகள் விசில் சத்தம் பறக்கிறது,

இந்த 105 என்பது சிங்கிள் மெர்ஜாரிட்டான 118 ஐ தொடுமா, விஜய் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பாரா, அல்லது எடப்பாடி அவருக்கு நேரடியாகவோ மறைமுகமாக கைகொடுக்க வேண்டிவருமா என்பதுதான் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஹாட் டாபிக்.

ஒரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்திப்போம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com