மீண்டும் உற்பத்தியை தொடங்குமா போர்டு நிறுவனம்? – நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு!

போர்டு நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
போர்டு நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
Published on

“போர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'போர்டு நிறுவனத்தை கொண்டு வர அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போர்டு உடனான 30 ஆண்டு கால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை பயன் உள்ளதாக அமைந்தது.” என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போர்டு, சென்னை அடுத்த மறைமலை நகரில், 1996இல் தொடங்கப்பட்டது. அங்கு உற்பத்தி செய்யப்பட்ட கார் இன்ஜின்கள் 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், நஷ்டத்தை கருத்தில் கொண்டு 2 ஆண்டுக்கு முன், இந்தியாவில் தன் கார் உற்பத்தியை போர்டு நிறுவனம் நிறுத்தியது. குஜராத்தில் சனந்த், தமிழகத்தில் சென்னை மறைமலை நகர் என 2 ஆலைகளும் மூடப்பட்டன.

குஜராத்தில் செயல்பட்ட போர்டு உற்பத்தி ஆலை, டாடா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. ஆனால், சென்னை மறைமலை நகரில் 360 ஏக்கரில் அமைந்துள்ள போர்டு உற்பத்தி ஆலை, இன்னும் அந்த நிறுவனம் வசமே உள்ளது.

இந்நிலையில் தான், போர்டு நிறுவன அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் பேச்சு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com