எம்.எல்.ஏ. ஐயப்பன் - மு.க.ஸ்டாலின்
தமிழ் நாடு
“எம்.ஜி.ஆர்., ஜெ. ஆசியுடன் ஸ்டாலின் மீண்டும் முதல்வர்…!”
"மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலினே வரவேண்டும்" என ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டமன்றத்தில் இன்று அவர் பேசியதாவது: “காலை உணவுத் திட்டத்தைப் பாராட்ட இவர்களுக்கு (அதிமுக) மனம் இல்லை. எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை இன்று வரை எப்படி பேசிக்கொண்டிருக்கிறோமோ அதுபோலவே காலை உணவுத் திட்டமும் பேசப்படும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடனும் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துகளோடும் மீண்டும் மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

