மகளிர் உரிமைத் தொகை திட்டம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்திருப்பதாவது:

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும், 4 சக்கர வாகனம், கனரக வாகனப்பதிவு, பத்திரப்பதிவு குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் இறப்பு விவரங்கள் பதிவு செய்யவும், பொதுவிநியோக திட்டம், சேவை வரி தரவுகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் தொழில், மின்சார பயன்பாடுகள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்யவும், மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமான வரி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com