கோடை வெயில்
கோடை வெயில்

பீதியை கிளப்பும் வானிலை அறிக்கை... 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட்ட 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான வெப்ப நிலை நீடிக்கும். மேற்கு வங்கம், ஒடிசா, பிகார், ஜார்க்கண்டில் ஒரு சில பகுதிகளில் மே 1ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும், அதன்பிறகு, மே 2ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மோசமானது முதல் மிக மோசமான வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடகம், கோவா, ராயலசீமா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இன்று முதல் மே 1ஆம் தேதி வரையும், கேரளத்தின் கொங்கன் பகுதிகளில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com