தலைமறைவாக இருந்த யூட்டியூபர் முக்தார் கைது!

யூடியூபர் முக்தார் கைது செய்யப்பட்டார்
யூடியூபர் முக்தார் கைது செய்யப்பட்டார்
Published on

பா.ஜ.க. பிரமுகர் அலிசா அப்துல்லா பற்றி இழிவாகப் பேசிய யூட்டியூபர் முக்தார் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் தலைமறைவாக இருந்தவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்தனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த அலிசா அப்துல்லா, தன்னைப் பற்றி திருச்சி சூர்யா, பிரபல யூட்டியூபர் முக்தார் ஆபாசமாகவும் இழிவுபடுத்தியும் பேசியதாக சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அலிசா அப்துல்லா தமிழக பா.ஜ.க.வின் மாநில விளையாட்டு - திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் அரசியலுக்கு வந்தபோதே, தன்னைப் பற்றி அவதூறாக சூர்யா, முக்தார் இருவரும் பேசினர் என்றும் ஆனால், அப்போது தான் அதைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், கடந்த 12 நாள்களுக்கு முன்னர், தன் கண்ணியத்தைக் குலைக்கும்வகையிலும், தன் குழந்தைகளைப் பற்றியும் இழிவாகப் பேசியதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இந்தப் புகாரில், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்தார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com