த.வெ.க. அமைச்சரின் கார் மோதியதில் இளைஞர் பலி!

TVK Minister Jegatheeshwari
த.வெ.க. அமைச்சர் ஜெகதீஸ்வரி
Published on

த.வெ.க. அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் த.வெ.க. சார்பில் வெற்றிபெற்று, சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. கடந்த மூன்று நாள்களாக சட்டப்பேரவை விடுமுறை என்பதால், தனது தொகுதிக்குச் சென்றிருந்தார்.

விடுமுறை முடிந்து, மீண்டும் சட்டப்பேரவையில் பங்கேற்க அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்னையை நோக்கி அரசு வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு முன்னால் பாதுகாப்பு வாகனமும், கடைசியாக அவரின் சொந்த வாகனமும் வந்தன.

இதில் மூன்றாவதாக வந்த அவருடைய சொந்தக் கார், சென்னை காட்டாங்குளத்தூர் அருகே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இறையன்பு என்ற 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்தக் காரைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவரின் காரை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com