சுத்துப்போட்ட கஞ்சா ஆசாமிகள்…திணறிய காவலர்கள்... பட்டப்பகலில் கொடூரம்!

சுத்துப்போட்ட கஞ்சா ஆசாமிகள்…திணறிய காவலர்கள்... பட்டப்பகலில் கொடூரம்!

கண்ணகி நகர்ப் பகுதியில் கஞ்சா போதையில் உள்ள இருவர் போலீசார் மீது கற்களை வீசி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் பகுதியில் சுனாமி நகர் குடியிருப்பில் 64ஆவது பிளாக்கில் வசித்து வருபவர் உமாபதி (வயது- 31). இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்தது உட்பட பல வழக்குகள் இருக்கிறது.

உமாபதி கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதை அறிந்த உமாபதி அவர்கள் இருவரையும் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இருவரையும் கத்தியால் வெட்டியுள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பு போலீசாரில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார், உமாபதியை கைது செய்ய முயன்றனர். அப்போது, அவர் திடீரென போலீசாரையே தாக்கியுள்ளனர். கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசி தாக்கியுள்ளார். அப்போது அவரது நண்பனும் சேர்ந்து கொள்ளவே இருவரும் சேர்ந்து கற்களை வீசி போலீசாரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத போலீசார் திணறிப் போனார்கள்.

உடனே உமாபதியும் அவரது கூட்டாளியும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கஞ்சா ஆசாமிகள் போலீசார் இருவரையும் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைலாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com