இர்பான்
இர்பான்

குழந்தையின் பாலினம்- யூட்டியூபர் இர்பானுக்கு 7 வருட சிறைவாசமா?

பிரபல யூட்டியூபர் இர்பான் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுப்பதில் இறங்கியுள்ளது.

யூட்டியூபர் இர்பான் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை அறிவதற்கான பரிசோதனையை துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேற்கொண்டார். பரிசோதனையில் பெண் குழந்தை என்பது உறுதியானது. இதை அவர் தன்னுடைய யூட்டியூப் சேனலில் கடந்த மே18ஆம் அறிவித்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை சார்பாக நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூட்டியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது.

வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்லும் நபர்களுக்கு தமிழகத்தில் ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது நடைமுறை.

இந்நிலையில், அவர் மீதான நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com