அஜித்குமார் கொலைக்கு முன்னர் சித்ரவதை செய்யப்படும் காட்சி
அஜித்குமார் கொலைக்கு முன்னர் சித்ரவதை செய்யப்படும் காட்சி

அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!

Published on

சிவகங்கை, திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கை மையப் புலனாய்வு அமைப்பு- சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியிருந்தார்கள். 

நேற்றும் இன்றும் தொடர் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், காலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் உறுதியாகக் கூறியிருந்தார். 

அதன் காரணமாக, தமிழக காவல்துறையே இந்த வழக்கை விசாரிக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணையில் நீதிபதிகள் அரசு வழக்குரைஞரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கிடுக்கிப்பிடி போட்டனர். 

அரசுத் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் உத்தரவிட்டார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com