அஜித்குமார் சித்ரவதைக் கொலை வழக்கு- மதுரை நீதிபதி விசாரிக்க உத்தரவு!

அஜித்குமார் கொலைக்கு முன்னர் சித்ரவதை செய்யப்படும் காட்சி
அஜித்குமார் கொலைக்கு முன்னர் சித்ரவதை செய்யப்படும் காட்சி
Published on

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் மடப்புரம் அஜித்குமார் படுகொலை விவகாரம், மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 27ஆம் தேதியன்று காவல்துறையினரால் கூட்டிச்செல்லப்பட்ட இளைஞர் அஜித்தை இரு நாள்கள் சட்டவிரோதமாகக் காவலில் வைத்து சித்ரவதை செய்து போலீசு கொலைசெய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. நேற்று அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் ஐந்து காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னர் எதிர்ப்பு வலுத்தபின் அவர்கள் மீது வழக்கு பதியப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்துக்குப் பின்னர் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பை நீதிபதிகள் கேள்விக் கணைகளை விடுத்தனர்.

இறுதியாக, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இவ்வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சுப்ரமணியம், மரியா கிளாட் உத்தரவிட்டனர்.

விசாரணை வரும் 8ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com