அண்ணா பல்கலை.யில் துப்புரவுப் பொறியியல் துறை- நிறைவேறுமா கோரிக்கை?

முதலமைச்சர் ஸ்டாலினுடன் சண்முகம் தலைமையில் சிபிஎம் கட்சிக் குழு சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலினுடன் சண்முகம் தலைமையில் சிபிஎம் கட்சிக் குழு சந்திப்பு
Published on

துப்புரவுத் தொழிலை நவீனமயமாக்கி அதிலிருந்து மனிதர்களை விலக்கிவைக்கும் நோக்கில் துப்புரவுப் பொறியியல் துறை ஒன்றை அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துவருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று மார்க்சியக் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையிலான அக்கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். 

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தி, முன்னாள் பொதுச்செயலாளர் சாமுவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலி, சின்னதுரை ஆகியோரும் உடனிருந்தனர். 

மேலும், கேபிள் தொலைக்காட்சித் தொழிலில் ஏற்கெனவே உள்ளூர் மட்ட இணைப்பாளர் இருக்கும் பகுதியில் புதிதாக யாரையும் விடக்கூடாது என்றும் வடசென்னைக் குடியிருப்புதாரர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. அந்த சங்கத்தினரும் சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர். 

பெரம்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரனும் உடனிருந்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com