அண்ணாமலை சரமாரி கேள்விகள்... அமைச்சர் பதிலுக்குமேல் பதில்!

Minister Govi Cheziyan- Annamalai
அமைச்சர் கோவி.செழியன் - அண்ணாமலை
Published on

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதில் பேராசிரியர் ஒருவரும் மாணவியும் சேர்ந்தே புகார்செய்ததாக மாநகரக் காவல்துறை ஆணையரும் பேராசிரியர்கள் ஒருவருக்கும் தகவலே தெரியாது; காவல்துறை விசாரித்தபின்னரே தெரியவந்தது என உயர்கல்வி அமைச்சரும் முரண்பாடாகப் பேசினார்கள். 

மேலும், கண்காணிப்பு கேமரா தொடர்பாகவும் இருவரும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டனர். 

இந்த முரண்பாடுகள் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியிருந்தார். 

அதற்குப் பதிலளிக்கும்வகையில் அமைச்சர் கோவி செழியன் அடுத்தடுத்து விளக்கங்களை அளித்துவருகிறார்.  

மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்த விளக்கம் எனும் தலைப்பில், “ அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100 க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் (POSH - Prevention of Sexual Harrasment Committee) உள் விசாரணை குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது.” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு அறிக்கையில், "பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவசர காலங்களில் ‘சிவப்பு நிற அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.

மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இச்செயலியை கூகுள் பிளேஸ்டோர்Google Play Store, ஆப்ஸ்டோஏ App Store ஆகியவற்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்." என்றும் அமைச்சர் செழியன் கூறியிருக்கிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com