அ.தி.மு.க. தலைமையகத்தில் எடப்பாடி- எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்!

அ.தி.மு.க. தலைமையகத்தில் எடப்பாடி- எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்!
Published on

அ.தி.மு.க.வின் நிறுவனர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிராமச்சந்திரனின் 109ஆவது பிறந்த நாளான இன்று அக்கட்சியின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் விமரிசையான கொண்டாட்டம் நடைபெற்றது. 

கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணியளவில் தலைமைக்க்கழகத்துக்கு வந்தார். 

கட்சியின் அவைத்தலைவர் முனுசாமி அவரை வரவேற்றார். முன்னணி நிர்வாகிகள் வேலுமணி, பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா உட்பட பலரும் உடனிருந்தனர். 

பழனிசாமி முதலில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் மரியாதை செய்தார். 

பின்னர், ஜெயலலிதா சிலைக்கும் மலர் மரியாதை செய்தார். 

அதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த கட்சியினருக்கு சாக்லேட், லட்டுகளை வழங்கினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com