அ.தி.மு.க. தொகுதிப் பங்கீடு முதல் பட்டியல் அறிவிப்பு!

அ.தி.மு.க. தொகுதிப் பங்கீடு முதல் பட்டியல் அறிவிப்பு!
Published on

அ.தி.மு.க. கூட்டணியில் முதல் கட்டமாகத் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையகத்தில் சற்றுமுன்னர் அவர் இதை வெளியிட்டார். 

மைய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னதாக அ.தி.மு.க. தலைமையகத்துக்கு வந்திருந்தார். 

அவருடன் கூட்டணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் வந்திருந்தனர். 

முதல் கட்டமாக மூன்று கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகளும், அ.ம.மு.க.வுக்கு 11தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தப்பட்டு, இன்று இரவுக்குள் தொகுதி விவரம் அறிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com